பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பெரிய பிரித்தானியாவின் மக்கள் சபையின் அன்பளிப்பாக, இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு 1949 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி சபாநாயகரின் ஆசனம் கையளிப்புச் செய்யப்பட்டது. பெரிய பிரித்தானியாவின் மாண்புமிகு மன்னர் ஆறாம் ஜோர்ஜின் உடன்பாட்டின் கீழ், மக்கள் சபையைச் சேர்ந்த அதி கெளரவ மேஜர் மில்னரின் தலைமையிலான ஆறு பேர் கொண்ட தூதுக் குழுவானது, இக்கையளிப்பு வைபவத்திற்காக இலங்கைக்கு விஜயம் செய்தது. இந்த ஆசனம் சபாநாயகர் சேர் பிரான்சிஸ் மொலமுரே அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது, 2 ஆம் உலக யுத்தத்தின் போது, ஜேர்மனியின் எண்ணற்ற குண்டுத் தாக்குதலால் ஓரளவுக்குச் சேதமடைந்த மக்கள் சபையின், கத்த ஆங்கில ஒக் தீராந்தியில் இருந்து செய்யப்பட்டது. ஆறு அடி உயரமான இந்த ஆசனத்தில் பொன் முலாமிடப்பட்ட இலை வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆசனத்திற்குக் கடும் பழுப்புச் சிவப்பு நிறத்திலான மெத்தையமைக்கப்பட்டுள்ளது. ஆசனத்தின் தலைமாட்டின் கீழ் உள்ள தோலுறையில் வாளேந்திய சிங்களச் சிங்கம் (சிஹல) பொன்னால் உருப்புடைப்புச் செய்யப்பட்டிருக்கிறது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks