பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1972 ஆம் ஆண்டு வரை நிலவிய செனேற் சபையினால் பயன்படுத்தப்பட்ட இச்செங்கோலானது 1956 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 01 ஆம் திகதி ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக அவர்களால் செனேற் சபைக்கு ஒப்படைக்கப்பட்டது.
அரச அழகியற் கலை நிறுவனத்தைச் சேர்ந்த டபிள்யு. ஏ. ஆரியசேன என்ற ஓவியரால் வடிவமைக்கப்பட்டதாக்க் கூறப்படம் செங்கோலைத் தயாரிக்கும் பொறுப்பு கொழும்பு, ஹேமசந்திர சகோதரர்கள் என்ற நகை தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இக் கம்பனியின் ஆலோசனைக்கிணங்க ரம்புக்கன, தொம்பே மடவில் வசிக்கும் ஈ.என். பியதிலக என்ற கலைஞரால் இது உருவாக்கப்பட்டது.
52 அங்குல நீளமும் 7 ½ இறாத்தல் நிறையும் கொண்ட இச் செங்கோல் 355 பகுதிகளைக் கொண்டுள்ளதோடு, நாற்பது பகுதிகளாகப் பிரிக்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு யானைத் தந்தங்கள், 45 இருபது கரட் தங்கக் காசுகள், 3 ½ இறாத்தல் கொண்ட 45 வெள்ளித் துண்டுகள் மற்றும் பெறுமதி மிக்க பல இரத்தினக் கற்கள் இதன் உருவாக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
“சந்திந்திரியோச நிபகோச” என்ற பாளி வாசகம் செங்கோலின் உச்சியில் பொறிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks