பார்க்க

E   |   සි   |  

ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்திலும் காலத்திற்கு காலம் தேவையானவாறு தெரிவுக்குழுவானது பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கியவாறான அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கைக்கு சமமான  அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களை நியமிக்கலாம்:—

               (அ)    தவிசாளராக உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர்;

               (ஆ)   இராஜாங்க அமைச்சர்;

               (இ)    பிரதி அமைச்சர், அத்துடன்;

                (ஈ)     தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் வேறு ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள்.

         (2)  தனது கையொப்பத்தின் கீழான விண்ணப்பத்தின்மீது முன் அனுமதிபெறாமல் குழுவின் தொடர்ச்சியான மூன்று கூட்டங்களிற்கு வருகைதராதுள்ள குழுவின் உறுப்பினர், அத்தகைய குழுவின் உறுப்பாண்மையை இழந்துள்ளாரெனக் இழந்துள்ளாரெனக் கருதப்படுவதோடு தெரிவுக்குழுவினால்  இணக்கம் காணப்பட்டாலன்றி அதே கூட்டத்தொடரில் அத்தகைய குழுவுக்கு மீளநியமிக்கப்படுதலுமாகாது:

                        ஆயின், முதலில் பாராளுமன்றத்தில் பெற்ற அனுமதியுடன் பாராளுமன்ற அமர்வுகளிலிருந்து சமுகமளிக்காதிருக்கும் அத்தகைய உறுப்பினர் அத்தகைய காலப்பிரிவில் வரும் ஒரு நாளில் இடம்பெறுகின்ற  அத்தகைய குழுவின் எந்தவொரு கூட்டத்திற்கும் முன்னைய ஏற்பாடுகள்  ஏற்புடையதாகாது.

         (3)  ஒரு அமைச்சுசார் ஆலோசைனக் குழுவின் கூட்டத்திற்கு தான் உறுப்பினராகவில்லாத எவரேனுமொரு பாராளுமன்ற உறுப்பினரும் தவிசாளரின் அனுமதியுடன் கலந்து கொள்ளலாம் என்பதோடு தவிசாளர் கோருகின்றபோது அதிலிருந்து நீங்கிக்கொள்ளுதலும்  வேண்டும்.

         (4)  எவரேனும் பாராளுமன்ற உறுப்பினரால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பரிசீலனை செய்வது மற்றும் தவிசாளர் அல்லது பாராளுமன்றத்தினால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும் தீர்மானங்கள், கட்டளைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட எந்தவொரு விடயங்கள் தொடர்பிலும் பரிசீலனைசெய்து அது தொடர்பில்  அறிக்கையிடுவது அமைச்சுசார் ஆலோசைனக் குழுவின் கடமையாகும்.

                 (5)  (அ)  குழுவின் கூட்டமானது குறித்த அமைச்சின் செயலாளருடனான கலந்தாலோசனையுடன் கூட்டப்படலாம்.

                      (ஆ)  அமைச்சுசார் ஆலோசைனக் குழுவானது தவிசாளர் ஊடாக எந்தவொரு   சட்டமூலம் அல்லது பிரேரணையை முன்னெடுப்பதற்கும் தத்துவத்தை கொண்டிருத்தல் வேண்டும்.

       (6)  ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசைனக் குழுவும் தவிசாளரினால் அழைக்கப்படும் எச்சந்தர்ப்பத்திலும் கூட வேண்டும். தவிசாளர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துடன் கலந்தாலோசித்து தவிசாளரினால் ஆகக்குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையேனும் கூட்டமொன்றை ஏற்பாடுசெய்வதோடு அர்த்தமுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் வகைகூறுதல் அனைத்து அமைச்சு செயலாளர்களதும்  கடமையாக இருப்பதோடு காலத்தற்கு காலம் அதன் சிபாரிசுகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடலும் வேண்டும்:

                   ஆயின், அத்தகைய அமைச்சுசார் ஆலோசைனக் குழுவின் ஆகக்குறைந்தது  மூன்று உறுப்பினர்களது எழுத்துமூல வேண்டுகோளின் பேரில்  கூடிய விரைவில் ஒரு கூட்டம் கூட்டப்படுதல் வேண்டும்.

       (7)  அமைச்சுசார் ஆலோசனைக் குழுவானது எவரேனுமாளை அதன் முன்னர் அழைத்து விசாரிக்கவும், ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை பெற்று பரிசீலனை செய்வதற்கும் இடத்திற்கு இடம்செல்வதற்கும் தமக்கு ஆற்றுப்படுத்தப்படும் விடயங்களை பூரணமாக பரிசீலனை செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பினும் கூடுவதற்கும் ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசைனக் குழுவும்  அதிகாரமுடையதாயிருத்தல் வேண்டும்.

       (8)  அமைச்சுசார் ஆலோசைனக் குழுவின் கூட்டநடப்பெண் மூன்று உறுப்பினர்களை கொண்டதாக இருக்கவேண்டுமென்பதோடு உரிய கூட்டநடப்பெண் இல்லாதபோது அத்தகைய அமைச்சுசார் ஆலோசைனக் குழுவினை தொழிற்படுத்தாமலிருப்பது அதன் தவிசாளரது கடமையாதல் வேண்டும்.

       (9)  குழுக்களிற்கான பொது விதிகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களிற்கும் ஏற்புடையதாகும்.]

குழு பட்டியல்

காண்க

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

அரச பெருந்தோட்டக் தொழில்முயற்சி மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks