07

E   |   සි   |  



பாராளுமன்றத் தீர்மானத்தின்மூலம் விசேட குழுவொன்று நியமிக்கப்படலாம்., விசேட குழுவொன்று பாராளுமன்றத்தின் அனுமதியின்றி பன்னிரண்டிற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருத்தலாகாது. அத்தகைய அனுமதி கோரும் பிரேரணைக்கு முன்னறிவித்தல் தேவைப்படும்., ஒரு விசேட குழுவினாலான விசாரணையொன்றின் நோக்கெல்லை, அது எந்தக் கட்டளையின் நியதிகளின்கீழ் நியமிக்கப்படுகின்றதோ அந்தக் கட்டளையினால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்; ஆனாலும், அது பாராளுமன்றத்தின் பணிப்பினால் விரிவாக்கப்படலாம் அல்லது மட்டுப்படுத்தப்படலாம். அத்தகைய கட்டளை, குழுவின் இறுதியறிக்கை முன்வைக்கப்படுவதற்கான காலத்தைக் குறித்துரைத்தல் வேண்டும்; ஆயினும், பாராளுமன்றம், அத்தகைய காலப்பகுதியை அது பொருத்தமானதானதெனக் கருதுகின்றவாறான குறித்துரைக்கப்பட்ட திகதி வரை நீடிக்கலாம்., ஒவ்வொரு விசேட குழுவினதும் தவிசாளரும் உறுப்பினர்களும் சபாநாயகரினால் நியமிக்கப்படுதல் வேண்டும். தவிசாளர் இல்லாதிருக்கும் சந்தர்ப்பத்தில், சமுகமளித்துள்ள உறுப்பினர்களினால் தெரிவுசெய்யப்பட்ட குழுவின் எவரேனும் உறுப்பினர் அக்கூட்டத்திற்கான தவிசாளராகவிருத்தல் வேண்டும்., தவிசாளர் நியமிக்கும் நேரத்திலும் இடத்திலும் குழு தனது முதற் கூட்டத்தை நடத்தும். முதற் கூட்டத்திற்குப் பின் நிகழும் கூட்டங்கள் குழு தீர்மானிக்கும் நேரங்களிலும் இடங்களிலும் நிகழ்தல் வேண்டும்., வேறுவகையாகக் கட்டளையிடப்பட்டாலொழிய, விசேட குழுவின் கூட்டநடப்பெண் நான்கு உறுப்பினர்களைக் கொண்டதாக அமைதல் வேண்டும்., விசேட குழுவொன்றில் வெற்றிடமொன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில், சபாநாயகர், காலத்திற்குக்காலம், அக்குழுவின் அத்தகைய உறுப்பினரின் இடத்தில் செயலாற்றுவதற்கு இன்னோர் உறுப்பினரை நியமிக்கலாம். விசேட குழுவின் முன்னனுமதியைப் பெறாமல் அக்குழுவின் தொடர்ச்சியான மூன்று கூட்டங்களிற்கு வருகைதராதுள்ள குழுவின் உறுப்பினர், அத்தகைய குழுவின் உறுப்பாண்மையை இழந்துள்ளாரெனக் கருதப்படுதல் வேண்டும். இந்நிலையியற் கட்டளையின் கீழான ஒவ்வொரு நியமனமும் பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தில் அறிவிக்கப்படுதல் வேண்டும்., விசேட குழுவொன்றின் தவிசாளர் மூலவாக்கொன்றைக் கொண்டிருத்தல் வேண்டும். அளிக்கப்பட்ட வாக்குகள் சமமாகவிருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் அறுதியிடும் வாக்கொன்றைப் பிரயோகிக்கலாம்., ஒரு விசேட குழுவிடம் ஆற்றுப்படுத்தப்பட்ட ஒரு சட்டமூலத்திலோ அல்லது விடயத்திலோ அவ்விசேட குழு சாட்சியங்களை விசாரிக்க வசதி செய்ய வேண்டுமென விரும்பினால், ஆட்களையோ பத்திரங்களையோ பதிவேடுகளையோ அவ்விசேட குழு வரவழைப்பதற்கு ஒரு தீர்மானம்மூலம் பாராளுமன்றம் அதிகாரம் வழங்கலாம். அத்தகைய அதிகாரம் வழங்கப்பட்ட எந்த ஒரு குழுவும் தன்முன் அளிக்கப்பட்ட சாட்சியத்தின் பதிவறிக்கையுடன் பாராளுமன்றத்திற்குத் தனது கருத்துக்கள், குறிப்புரைகள் பற்றி அறிக்கையிட அனுமதி பெற்றிருக்கும். அத்துடன் பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவது தகுந்ததெனத் தான் கருதும் எந்த விடயம் பற்றியும் ஒரு விசேட அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் அனுமதி பெற்றிருக்கும், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டாலும் அல்லது பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டாலும் ஒரு விசேட குழு தனது புலனாய்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்தலாம். தனது அறிக்கையைக் குழு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கும்வரை அல்லது பாராளுமன்றத்தின் பிரேரணை ஒன்றின் மீதன்றி ஒரு விசேட குழுவைக் கலைக்க முடியாது.,எந்தவொரு விசேட குழுவினதும் கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் சமுகமளிக்கும் உறுப்பினர்களின் பெயர்கள், விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் பெயர்கள், வாக்கெடுப்பு எதுவும் நிகழ்ந்தால் அங்கு பிரேரிக்கப்பட்ட பிரேரணை, பிரேரித்தவர் பெயர், அப்பிரேரணைமீது சமுகமளித்த உறுப்பினர்கள் அளித்த வாக்குகள் ஆகியன விசேட குழுவின் கூட்ட அறிக்கையில் பதியப்படல் வேண்டும். அத்தகைய கூட்ட அறிக்கைகள் சாட்சியக் குறிப்புகளுடன் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டு குழுவின் அறிக்கையுடன் அச்சிடப்படல் வேண்டும்.


குழு பட்டியல்

காண்க

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 கூட்டத்தொடர்  | விசேட குழுக்கள்

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 கூட்டத்தொடர்  | விசேட குழுக்கள்

இலங்கையில் சட்டக் கல்வியின் மீளாய்வு மற்றும் சீர்திருத்தத்திற்கான விதப்புரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 கூட்டத்தொடர்  | விசேட குழுக்கள்

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 கூட்டத்தொடர்  | விசேட குழுக்கள்

இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சிகளுக்கான தயார்நிலை (B-READY) சுட்டென்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 கூட்டத்தொடர்  | விசேட குழுக்கள்

தற்​போதுள்ள அமைச்சுகளின் கீழ் உள்வாங்கப்படாத அரச நிறுவனங்களால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 கூட்டத்தொடர்  | விசேட குழுக்கள்

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 கூட்டத்தொடர்  | விசேட குழுக்கள்

இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 4 கூட்டத்தொடர்  | விசேட குழுக்கள்





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks