வேகமாக அதிகரித்துவரும் வாகன விபத்துகளைப் பற்றி ஆராய்வதற்கான பாராளுமன்றத் தெரிகுழு,—
இலங்கையில் தினமும் சுமார் 5 - 6 பெறுமதிமிக்க உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக அமையும் சுமார் 150 வாகன விபத்துகள் நடைபெறுவதாக அறிக்கை செய்யப் பட்டிருப்பதாதலாலும்;
வீதி விபத்துகளில் காயமடையும் ஆட்களின் சிகிச்சைக்காக அரசாங்கம் வருடாந்தம் பில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிடுவதாக அறிக்கை செய்யப்பட்டிருப்பதாதலாலும்;
வருடம் தோறும் பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் சேதமடைவதாகவும் அந்த சேதமடைந்த வாகனங்களைத் திருத்துவதற்காக காப்புறுதிக் கம்பனிகளால் பில்லியன் கணக்கான ரூபாய்கள் செலவிடப்படுவதாகவும் அறிக்கை செய்யப்பட்டிருப்பதாதலாலும்;
போக்குவரத்து நெருக்கடி காரணமாக வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் கணிசமான அளவு விரயமாவதாதலாலும்;
வீதி விபத்துகள் மக்களுக்கும் நாட்டுக்கும் மிகப் பெரிய சுகாதார மற்றும் சமூக, பொருளாதார சுமையாக இருப்பதாதலாலும்;
2011-2020 காலப்பகுதியை பாதுகாப்புக்கான தசாப்தமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிரகடனம் செய்திருப்பதாதலாலும்; அத்துடன்
வேகமாக அதிகரித்து வரும் வாகன விபத்துகள் பற்றி ஆராய்வதற்காக ஆறாவது பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட தெரிகுழுவுக்கு அப்பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அதன் அறிக்கையை சமர்ப்பிக்க முடியாமற் போனதாதலாலும்,
(அ) வீதி விபத்துகளின் அதிகரிப்பை புள்ளிவிபர ரீதியாக வகைப்படுத்தி அத்தகைய அதிகரிப்புக்கான காரணங்களை விஞ்ஞான ரீதியாக இனங்காண வேண்டுமா எனவும்,
(ஆ) அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீதி வலையமைப்பு போதுமானதாக உள்ளதா எனவும்,
(இ) வாகன ஓட்டுனர்கள், சைக்கிள் சவாரி செய்வோர் மற்றும் பாதசாரிகள் அடங்கலாக வீதி பயன்படுத்துனர்களால் வீதி ஒழுங்கு விதிகள் முழுமையாக புறக்கணிக்கப் படுகின்றனரா எனவும்,
(ஈ) வீதி ஒழுங்கு விதிகளை பயனுறுவகையில் அமுல்படுத்த அதிகாரிகள், குறிப்பாக பொலிசார் தவறுகின்றனரா எனவும்,
(உ) வீதி ஒழுங்கு பற்றிய விதிகள் தொடர்பாக புதிய சட்டங்களை அறிமுகம் செய்யவோ அல்லது நடைமுறையிலுள்ள சட்டங்களை திருத்தம் செய்யவோ தேவைப்பாடுள்ளதா என்பதையும்,
(ஊ) இந்நாட்டில் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக நவீன வீதிப் பாதுகாப்புக் கருவிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் முறைமைகள் பரிசோதனை செய்யப் படுகின்றனவா எனவும்,
(எ) வாகன விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கும் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்குமான முறைமை ஒன்று உள்ளதா எனவும்,
(ஏ) வீதி விபத்துகளை தடுப்பதற்கான எத்தகைய குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கை முறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும்,
ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை செய்வவதற்கு பாராளுமன்றத் தெரிகுழு ஒன்று நியமிக்கப்படுதல் வேண்டும் என இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
(2) (அ) அக்குழுவும் அதன் தவிசாளரும் சபாநாயகரினால் நியமிக்கப்படுதல் வேண்டும்.
(ஆ) நிலையியற் கட்டளை 95 இன் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும், அக்குழு பதினேழுக்கு (17) மேற்படாத உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
(3) அக்குழுவானது,
(அ) அதன் கூட்ட நடப்பெண்ணைத் நிர்ணயிப்பதற்கு அதிகாரமுடையதாயிருத்தல் வேண்டும்.
(ஆ) குழுவின் முன் தோற்றுமாறு எவரையும் கட்டளையிட்டழைப்பதற்கும் ஏதேனும் ஆவணத்தை அல்லது பதிவேட்டைச் சமாப்பிக்குமாறு எவரேனும் ஒருவருக்குக் கட்டளையிடவும் மேலுள்ள விடயங்களைப் பூரணமாக ஆராய்வதற்குத் தேவையானதெனக் குழு கருதும் அத்தகைய எழுத்திலான அல்லது வாய்மொழியிலான அனைத்துச் சாட்சிகளைப் பெற்றுக் கொள்ளவும் பொறுப்பேற்கவும் அதிகாரமுடையதாயிருத்தல் வேண்டும்.
(இ) குழுவுக்குத் துணைபுரியவென உரிய துறைகளில் சிறப்புத் தகுதிகள் உடையோர் மற்றும் நிபுணர்கள் ஆகியோரின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகாரமுடையதாயிருத்தல் வேண்டும்.
(ஈ) காலத்துக்குக்காலம் இடைக்கால அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படினும் கூட்டத்தைத் தொடர்ந்து நடாத்திச் செல்லவும் அதிகாரமுடையதாயிருத்தல் வேண்டும்.
பெயர்
தம்மிக தசநாயக்க
தொலைபேசி
0094-11-2777228
தொலைநகல்
0094-11-2777227
மின்னஞ்சல்
dhammika_d@parliment.lk
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர்
திகதி: 2015-07-26
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர் )
திகதி: 2024-01-10
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 5 வது கூட்டத்தொடர் )
திகதி: 2024-09-04
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் | 1 வது கூட்டத்தொடர் )
சமர்ப்பிக்கப்பட்ட திகதி - 2014-12-12