E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0517/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 517/ '18

      கௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத்,— புத்த சாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) நாட்டினுள் அறநெறிக் கல்வியை பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) அறநெறி பாடசாலை அபிவிருத்திக்கென தாபிக்கப்பட்டுள்ள நிதியத்தில் உள்ள நிதித் தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) அந் நிதியத்தை அதிகரிப்பதற்கு 2017 ஆம் ஆண்டுக்கு வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதித் தொகை எவ்வளவென்பதையும்;

      (iv) அறநெறி பாடசாலை ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற கௌரவ சேவையை ஊக்குவித்தல், பாராட்டுதல் மற்றும் ஆசிரியர்களை மேற்படி முறைமையினுள் தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற மேம்பாட்டு நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (v) ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையில் மேலதிக போதனா வகுப்புகளை நடாத்துதல், பிள்ளைகள் அறநெறிப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பெரும் இடையூறாக இருப்பதால், அந் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்படும் புதிய நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-22

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

புத்தசாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks