E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0522/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 522/ '18

      கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 ஆம் ஆண்டில் இலங்கையின் வர்த்தக நிலுவையின் பற்றாக்குறை யாதென்பதையும்;

      (ii) பெற்றோலியம் மற்றும் தங்கம் இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்;

      (iii) 2016 ஆம் ஆண்டில் தேயிலை மற்றும் வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதி வருமானம் யாதென்பதையும்;

      (iv) தேயிலை மற்றும் வாசனைத் திரவியங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட துறைகளை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறை எத்தனை மில்லியன் ரூபாய் என்பதையும்;

      (ii) பணிகள் கணக்கு மற்றும் இரண்டாம் நிலை வருமானம் மீதான தேறிய பெறுகைகளின் நிலுவை யாதென்பதையும்;

      (iii) பணிகள் கணக்கின் மேம்பாட்டுக்காக சுற்றுலாக் கைத்தொழிலை ஊக்குவிப்பதன் பொருட்டு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள மூலங்கள் யாவையென்பதையும்;

      (iv) வெளிநாட்டுத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களிடமிருந்து கிடைக்கின்ற பண அனுப்பல்களை ஊக்குவிப்பதற்கான உத்தேச நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-09

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks