E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0542/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. 2370/ '17

      கௌரவ வாசுதேவ நாணயக்கார,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) புளுமெண்டல் துறைமுக பிரவேச வழியின் இருமருங்கிலுமுள்ள நிலப்பகுதியை இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கையேற்று கொள்கலன்களை பரிசோதனை செய்ய பயன்படுத்துவதாயிருப்பின், தற்போது கொள்கலன்களை பரிசோதனை செய்வதற்கான பிரிவு அமைந்துள்ள நுகே வீதி நிலையத்தை நோக்கிச் செல்கையில் தோன்றுகின்ற 6/10 மணித்தியாலங்களுக்கிடைப்பட்ட பாரிய தாமதத்தை தவிர்த்துக்கொள்ள இயலுமென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

      (ii) ஒருசில இறக்குமதியாளர்கள் அவர்களின் களஞ்சியங்கள் வெறுமையாகும்வரை இறக்குமதி செய்துள்ள பண்டங்களை விடுவித்துக்கொள்வதை தாமதம்செய்து தாமதக் கட்டணங்களை செலுத்த நடவடிக்கை மேற்கொள்வது அவர்களுக்கு இலாபமானதென்பதை அறிவாரா;

      (iii) ஆமெனில், மேலே (i) மற்றும் (ii) சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-20

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks