E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0098/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 98/ '18

      கௌரவ தயாசிறி ஜயசேகர,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நாட்டில் காணப்படும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக செயற்படும் உத்தியோகத்தர்களை உற்சாகப்படுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுள்ள பரிசுத்தொகையின் பெறுமதி ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் யாது;

      (ii) இதுவரையில் மேற்படி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது;

      (iii) கொடுப்பனவு வழங்கப்பட வேண்டிய விதம் தொடர்பில் யாதேனும் அளவுகோல்கள் காணப்படுகின்றனவா;

      (iv) ஆமெனில், அந்த அளவுகோல்களை சபையில் சமர்ப்பிப்பாரா;

      (v) உயிரைப் பணயமாக வைத்து செயற்படும் குறிப்பிட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு / பரிசுத் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படுமா;

      (vi) ஆமெனில், குறிப்பிட்ட கால வரையறை மற்றும் செயன்முறையை சபாபீடத்தில் சமர்ப்பிப்பாரா;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-04

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-04

பதில் அளித்தார்

கௌரவ ருவன் விஜேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks