E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0208/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 208/ '18

      கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு.—

      (அ) (i) 1983 ஆம் ஆண்டு யுத்த நிலைமை ஆரம்பிப்பதற்கு முன்னர் வட மாகாணத்தில் காணப்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குச் (CPC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் அவை அமைக்கப்பட்டிருந்த இடங்களின் முகவரிகள் யாவை;

      (ii) மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் முகவரிகள் யாவை;

      (iii) மேலே (ii) இல் குறிப்பிடப்படும் உரிமையாளர்களில் யுத்த காலத்தில் கொலைசெய்யப்படுதல், காணாமற்போதல் அல்லது மரணமடைதல் காரணமாக மேற்படி நிரப்பு நிலையங்களின் உரிமை கைமாற்றப்பட்டுள்ள உரிமையாளர்கள் யாவர்;

      (iv) இதற்குப் பின்னர் மேற்படி நிரப்பு நிலையங்களின் உரிமையைப் பெற்றுக்கொண்ட நபர்கள் மற்றும் அவர்களது முகவரிகள் யாவை;

      (v) பின்னுரிமையாளருக்கு அதன் ஆரம்ப உரிமையாளருடன் ஏதேனும் உறவுமுறை காணப்படுமாயின், அதனைக் குறிப்பிடுவாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-07

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks