பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0211/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 211/ '18

      கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மின்சார சபை, ஏஸ் எம்பிலிப்பிட்டிய மின் வலு நிலையத்திலிருந்து மின் கொள்வனவை ஆரம்பித்த திகதி யாது என்பதையும்;

      (ii) மேற்படி காலப்பகுதிக்குள் குறித்த மின் வலு நிலையத்திலிருந்து ஒரு அலகு மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்ட விலை எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்படி முழுக் காலப்பகுதிக்குள் ஏஸ் எம்பிலிப்பிட்டிய மின் வலு நிலையத்திற்கு செலுத்தப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்பதையும்;

      (iv) மேற்படி மின் வலு நிலையத்திற்கு உரிமையாளரான கம்பனி முதலீடு செய்துள்ள தொகை எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 10 வருடங்கள் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் உடன்படிக்கை நீடிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;

      (ii) உடன்படிக்கையை நீடித்தமைக்கான காரணம் யாது என்பதையும்;

      (iii) அதற்காக மக்கள் உபயோக ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், மேற்படி அங்கீகாரத்தின் பிரதியை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iv) ஏஸ் எம்பிலிப்பிட்டிய மின் வலு நிலையத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள சகல உடன்படிக்கைகளும் சபையில் சமர்ப்பிக்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-20

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-20

பதில் அளித்தார்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks