E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0225/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 225/ '18

      கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 1999.07.02 ஆம் திகதிய 1086/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட, இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பினை அடிப்படையாகக் கொண்டு, 2005 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு, 2006 ஆம் அண்டில் போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு அதில் சித்தியடைந்த ஒருசில அலுவலர்களுக்கு 2009.11.13 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அதிபர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (ii) மேற்படி போட்டிப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்ட 212/2010/FR ஆம் இலக்க மற்றும் 2012.01.26 ஆம் திகதிய வழக்குத் தீர்ப்பின்படி 2010, 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அதிபர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும்;

      (iii) இந்த நியமனங்கள் 1999.07.02 ஆம் திகதிய 1086/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின்படி வழங்கப்பட்டுள்ளபோதிலும், பதவி உயர்வு வழங்கும்போது 2014.10.22 ஆம் திகதிய 1885/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட புதிய இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு ஏற்புடைய நிபந்தனைகளின் அடிப்படையாகக் கொள்ளப்பட்டன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இவ்வாறு ஒரே பரீட்சையில் தோற்றியவர்களுக்கு பல வருட காலமாக அவ்வப்போது நியமனங்கள் வழங்கப்படுவது அநீதியானது என்பதையும்;

      (ii) இவ்வாறு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கும்போது புதிய சேவை பிரமாணக் குறிப்பினை அடிப்படையாகக் கொள்வதன் மூலம் கடந்த காலத்திற்கும் ஏற்புடைய விதத்தில் புதிய நிபந்தனைகளுக்கு உட்படுத்துதல் அநீதியானது என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-10

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-07-10

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks