E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0232/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

    1. 232/ '18

      கெளரவ ரோஹினி குமாரி விஜேரத்ன,— நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் நிருவகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) மேற்படி பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த பீடங்களின் எண்ணிக்கை தொடர்பான பட்டியலொன்றைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iii) மேற்படி பல்கலைக்கழகங்களிலும் பீடங்களிலும் தற்போது கல்வி கற்று வரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி பல்கலைக்கழகங்களிலும் பீடங்களிலும் வெளிவாரிப் பட்டப்படிப்பு கற்கைநெறிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும்;

      (ii) ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பீடத்திலும் வெளிவாரிப் பட்டப் படிப்பிற்காக பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதையும்;

      (iii) ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பீடத்திலும் வெளிவாரிப் பட்டப் படிப்பிற்காக அறவிடப்படும் கட்டணங்கள் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) (i) ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பீடத்திலும் வெளிவாரிப் பட்டப் படிப்பிற்காக பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களினால் கற்கை நெறிக்காக செலுத்தப்படும் கட்டணங்கள் எந்தக் கணக்கில் வைப்பிலிடப்படுகின்றன என்பதையும்;

      (ii) மேற்படி பணம் வரவு வைக்கப்படும் கணக்குகளில் தற்போதுள்ள மீதிகள் யாவை என்பதையும்;

      (iii) அவ்வாறு கணக்கு வைக்கப்பட்டுள்ள பணம், நிதி அமைச்சு அல்லது உயர் கல்வி அமைச்சு அல்லது வேறு அரச நிறுவனமொன்றினால் கண்காணிக்கப்படுகிறதா என்பதையும்;

      (iv) ஆமெனில், அந்நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      அவர் மேலும் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-18

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-18

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks