E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0274/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

    1. 274/ '18

      கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மொனறாகலை மாவட்டத்தில் மொனறாகலை நகருக்கு மேல் அமைந்துள்ள மரகல ஒய மலைத்தொடரைக் கொண்டுள்ள வனம் ஒதுக்குப் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

      (iii) மரகல ஒய மலைத்தொடரைக் கொண்டுள்ள மேற்படி வனப் பகுதியானது சுற்றாடல் ரீதியில் கூருணர்வுமிக்க வலயமாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

      (v) மரகல ஒய வனத்திற்குரிய காணியின் அளவு எவ்வளவென்பதையும்;

      (vi) இக்கூருணர்வுமிக்க வலயத்தின் அல்லது வன ஒதுக்கத்தின் எல்லைகள் அடையாளமிடப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (vii) இந்த மலைத் தொடரிலிருந்து ஆரம்பமாகும் நதிகள், சிற்றாறுகள், ஓடைகள் மற்றும் கிளை ஆறுகள் யாவையென்பதையும்;

      (viii) கடந்த காலப்பகுதியில் இதன் நீர் மூலமொன்றாகிய "ஜீ லோன்" நீர் ஒதுக்குப் பிரதேசத்திற்கு அருகாமையில் அனுமதியற்ற செயற்பாடுகளின் காரணமாக அருந்துவதற்காக பெறப்படும் நீர்க் கருத்திட்டத்தின் நீர் மாசடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ix) மேற்படி வனப் பகுதியையும் நீர் மூலத்தையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-23

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-23

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks