பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
316/ '18
கெளரவ தாரக்க பாலசூரிய,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கேகாலை உப வீதியின் 3 ஆம் கட்டத்தின் கீழ் சுவீகரித்துக் கொள்ளப்பட்டுள்ள காணிகளுக்கு அரசாங்கத்தினால் ஒரு சில குடியிருப்பாளர்களுக்கு நட்டஈடு செலுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) எனினும், அவ்வாறு சுவீகரித்துக் கொள்ளப்பட்ட கேகாலை, பண்டாரநாயக்க மாவத்தை, இலக்கம் 145 இல் வசிக்கின்ற போகஹலந்த குடும்பத்தவர்களுக்கு உரித்தான காணிக்கு ரூபா 2,375,750/- தொகையை செலுத்துவதற்கு, காணி கொள்ளல் மீளாய்வுச் சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) எனினும், இதுவரை மேற்படி நட்டஈட்டுத் தொகை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) போகஹலந்த குடும்பத்தின் தந்தை மற்றும் சகோதரர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதுடன், தற்போதைக்கு அக்குடும்பத்தில் பெண்கள் மாத்திரம் எஞ்சியிருப்பதனால், இது தொடர்பில் கருணை அடிப்படையில் ஆராய்ந்து சட்டபூர்வமாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நட்டஈட்டுத் தொகையை துரிதமாகப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-05
கேட்டவர்
கௌரவ தாரக்க பாலசூரிய, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks