E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0317/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தாரக்க பாலசூரிய, பா.உ.

    1.  

       317/ 18

       

      கெளரவ தாரக பாலசூரிய,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

       

      ()     (i)     வெற்றிடமாக உள்ள மாவனெல்லை பிரதேச சபையின் செயலாளர் பதவிக்கு அதில் முன்னர் கடமையாற்றி ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான திருமதி எம்.பத்மினி செனெஹெலதா நியமனம் செய்யப்பட்டார் என்பதையும்;

       

      (ii) இவருக்கு எதிராக மாகாண ஆளுநரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் நடாத்தப்பட்ட விசாரணையின் பின்னர், இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக மாகாண அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினால் மேற்படி பதவிக்கு பதில் கடமையாற்றுவதன் அடிப்படையில் பதவிக்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள திரு டபிள்யு.டி.கே.ஏக்கநாயக்க நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதையும்;

       

      (iii) பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர், திரு ஏக்கநாயக்கவுக்கு பிரதேச சபையின் செயலாளர் பதவியின் கடமை நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிப்பதில்லை என்பதையும்;

       

      அவர் அறிவாரா?

       

      () எனவே தவிசாளரின் இந்த சட்டவிரோதமான மற்றும் தார்மீகமற்ற நடவடிக்கை தொடர்பில் சபரகமுவா மாகாண ஆளுநரை அறிவுறுத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

       

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2019-02-06

கேட்டவர்

கௌரவ தாரக்க பாலசூரிய, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-02-06

பதில் அளித்தார்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks