பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
380/ '18
கௌரவ எஸ்.எம் மரிக்கார்,— நிதி, வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வரையறுக்கப்பட்ட கிழக்கு ஹேவாகம் கோரலே பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தினால் இலங்கை மத்திய வங்கியின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற நிதி நிறுவனமொன்றின் ஊடாக திறைசேரி முறிகள் கோரப்பட்டு, பெற்றுக் கொள்ளப்பட்டு அல்லது ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்தொகை எவ்வளவென்பதையும்;
(iii) இக் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற திகதி யாதென்பதையும்;
(iv) இச் சங்கத்தின் நிதிக்கு என்ன நடந்துள்ளதென்பதையும்;
(v) இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கிக்குப் பொறுப்பு இல்லையா என்பதையும்;
(vi) இந் நிதி வைப்பு செய்யப்பட்ட நிறுவனம் இன்றளவில் இயங்குகின்றதா என்பதையும்;
(vii) அந் நிறுவனத்தின் உரிமையாளர்கள் யாவர் என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) வரையறுக்கப்பட்ட கிழக்கு ஹேவாகம் கோரலே பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தின் கிராமிய வங்கி வைப்பாளர்களுக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) கூட்டுறவு பணிப்பாளர் சபைக்கு அரச வங்கியொன்றைத் தவிர தனியார் நிதி நிறுவனமொன்றில் நிதி முதலீடு செய்ய முடியுமா என்பதையும்;
(iii) மக்கள் பணத்தை தன் விருப்பம் போல வைப்பு செய்துள்ள காரணத்தினால் ஏற்பட்ட இழப்பினை பணிப்பாளர் சபையிடமிருந்து அறவிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) இது தொடர்பாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-07
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-02-07
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks