E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0412/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ.

    1. 412/'19

      கௌரவ நிஹால் கலப்பத்தி,— நிதி வெகுசன ஊடகத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அமைச்சரவைத் தீர்மானத்தின்படி உற்பத்தி வரிச் சட்டத்தின் கீழ் கடமையாற்றுவதற்காக மது வரிப் பரிசோதகர் பதவிக்கு மேலதிகமாக உற்பத்தி வரிப் பரிசோதகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட மது வரிப் பரிசோதகர்களின் பதவிப் பெயர் உற்பத்தி வரிப் பரிசோதகர் என மாற்றப்பட்டுள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) உற்பத்தி வரிப் பரிசோதகர்களின் சேவைப் பிரச்சினையொன்று தொடர்பாக 1995.09.19 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வினாக்களுக்கு வழங்கிய பதில்களை நிராகரிக்கின்றாரா என்பதையும்;

      (iii) 231/98 ஆம் இலக்க உயர் நீதிமன்றத்தின் வழக்கு இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் இந்த உத்தியோகத்தர்களை சுங்கத்திணைக்களத்தின் உற்பத்தி வரிப் பிரிவுக்கு உள்ளீர்க்கப் படுவதற்காக வழங்கப்பட்ட கடிதத்தின் 7வது பந்திக்கமைய மது வரி மேற்பார்வையாளர் பதவியின் நியமன நிபந்தனைகள் மற்றும் மது வரி பரிசோதகர் தரத்தின் (உற்பத்தி வரி பரிசோதகர் தரத்தின்) நிபந்தனைகள் அதேவாறு நடமுறையில் இருப்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iv) புதிய பதவியொன்றுக்கு நியமிக்காமல் அரச விதிமுறைகளுக்கமைய ஓர் திணைக்களத்திலிருந்து மற்றுமோர் திணைக்களத்துக்கு உள்ளீர்த்தல் மாத்திரம் செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழு செய்துள்ள சிபாரிசினை ஏற்றுக்கொள்வார என்பதையும்;

      அவர் இச் சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-07

கேட்டவர்

கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-02-07

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks