E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0413/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ.

    1. 413/ '19

      கௌரவ நிஹால் கலப்பத்தி,— நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சேவை அவசியத்தின் அடிப்படையில் நிதிப்பிரமாணம் 71 இன் கீழ் ஏற்படுத்தப்பட்ட மது வரி பரிசோதகர் பதவிக்குரிய சம்பளம் அமைச்சரவை தீர்மானத்துக்கமைய உற்பத்தி வரிச்சட்டத்தின் கீழ் கடமையை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட உற்பத்திவரி பரிசோதகர் பதவிக்குரிய சம்பளத்துக்கு சமனானது என்பதையும்;

      (ii) அமைச்சரவை, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதி மன்றம் என்பவற்றின் இணக்கப்பாட்டுடன் கலால் வரி பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை சுங்கவரி திணைக்களத்தில் பணியாற்றும் கலால் வரி பரிசோதகர்களுக்கும் 1992 தொடக்கம் 2006 வரை வழங்கப்பட்டதென்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா ?

      (ஆ) (i) அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கட்டளைப்படி பதவிப்பெயரை மாற்றாமல் புதிய நியமனங்களை வழங்காமல் திணைக்களமொன்றிலிருந்து மற்றுமொரு திணைக்களத்துக்கு உள்ளீர்ப்பதன் முலம் அந்தப் பதவியின் சேவைப் பிரிவு, சம்பளத் தொகுதி, சம்பள குறியீட்டு இலக்கம் மற்றும் சம்பள அளவுத் திட்டத்தை குறைத்தல் மாற்றுதல் அல்லது வேறு ஏதேனும் பாதகத் தன்மையை ஏற்படுத்தல் தற்போதைய சட்டவிதிமுறைகளுக்கு ஏற்புடையதா என்பதையும்;

      (ii) அவ்வாறெனின் அனைவரையும் சமமாக மதித்தல் என்ற கோட்பாட்டை அது மீறுகின்றது என்பதையும் ஏற்றுக்கொள்வீரா?

      என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா ?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-20

கேட்டவர்

கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks