பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
442/ '19
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு டிப்போ முகாமையாளராக பணியாற்றிய பொறியியலாளர் திரு. எம். கிருஷ்ணராஜா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(ii) 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் வரை காணப்பட்ட டிப்போவின் நிதி மற்றும் நிர்வாகம் பற்றிய முன்னேற்றம் யாதென்பதையும்;
(iii) அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ள டிப்போ முகாமையாளரின் பெயர் மற்றும் அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற தொழிற்சங்கம் என்பன யாவை என்பதையும்;
(iv) டிப்போ முகாமையாளர் பதவிக்காக பொறியியலாளர் திரு எம். கிருஷ்ணராஜா அவர்களைவிட தற்போது நியமிக்கப்பட்டுள்ள நபர் தகுதி பெறுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மட்டக்களப்பு டிப்போவின் நிர்வாக நடவடிக்கைகள் தேசிய ஊழியர் சங்கத்தின் தேவைக்காக இடம்பெறுகின்றதா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-05-24
கேட்டவர்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-05-24
பதில் அளித்தார்
கௌரவ அர்ஜுன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks