E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0452/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சந்திம கமகே, பா.உ.

    1. 452/ '19

      கௌரவ சந்திம கமகே,— காணி, பாராளுமன்ற மறுசீரமைப்புகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பதவிய நகரிலிருந்து கஹட்டகொல்லேவ வரையான (பிரதான வீதியின் இடது புற பிரதேசம்) பிரதேசம் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இப் பிரதேசத்தில் பதவிய மாவட்ட மருத்துவமனை, கிராமங்கள், விஹாரைகள் மற்றும் சனசமூக நிலையம் ஆகியவை அமைந்துள்ளதென்பதையும்;

      (ii) 1957 ஆம் ஆண்டு தொடக்கம் இப் பிரதேசத்தில் மக்கள் குடியிருக்கின்றனர் என்பதையும்;

      (iii) அதன் குடியிருப்பாளர்கள் சிலரிடம் சட்ட ரீதியான காணி உரிமப்பத்திரங்கள் காணப்படுகின்றதென்பதையும்;

      (iv) ஏனைய குடியிருப்பாளர்களுக்கு காணி உரிமப்பத்திரங்களை பெறுகையில் வனசீவராசிகள் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளமை அதற்கு இடையூறாக உள்ளதென்பதையும்;

      (v) இக் காரணத்தினால் பதவிய நகரில் பல வருடங்களாக குடியிருக்கின்ற ஆட்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) காணி உரிமப்பத்திரமின்றி மேற்படி காணிகளில் குடியிருக்கின்ற ஆட்களுக்கு உரிமப்பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      (ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-04-03

கேட்டவர்

கௌரவ சந்திம கமகே, பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-04-03

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks