பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0472/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

    1. 472/ '19

      கௌரவ. எஸ் சி முத்துகுமாரண,— கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இரசாயன உரப் பாவனையிலிருந்து விவசாயிகளை விடுவிப்பதற்கு உயர் தரத்திலான சேதனப் பசளை உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

      (ii) 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்ட சேதனப் பசளையின் அளவு ஒவ்வொரு ஆண்டிற்கும் ஏற்ப வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iii) அந்தப் பசளையின் தரத்தை பரிசோதிப்பதற்கான முறையொன்று தயாரிக்கப்பட்டிருக்குமெனில் அது யாதென்பதையும்;

      (iv) இப்பசளை தரம் மிக்கது என்பதனை உறுதி செய்யும் நிறுவனங்கள் உள்ளதா என்பதையும்;

      (v) ஆமெனில் அந்நிறுவனங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (vi) தரப் பரிசோதனைக்கு பொறுப்புக்கூறக்கூடியதொரு நிறுவனம் இல்லையென்றால் அவ்வாறானதொரு நிறுவனம் தாபிக்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-23

கேட்டவர்

கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-07-23

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks