பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
474/ '19
கௌரவ பிமல் ரத்நாயக்க,— பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தாபனக் கோவையின் 18:2:1 உப பிரிவிற்கமைவாக அரச சேவையில் ஈடுபட்டுள்ள பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு குழந்தை உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு பிரசவத்திற்கும் முழுச் சம்பளத்துடன் கூடியதாக அரசாங்கத்தின் 84 வேலை நாட்களை லீவு நாட்களாக பெற்றுக்கொள்வதற்கு உரித்துள்ளது என்பதையும்;
(ii) தாபனக் கோவையின் 18:3:1 உப பிரிவிற்கு அமைவாக பிள்ளையை பராமரிப்பதற்காக 84 நாட்கள் அரைச் சம்பளத்துடன் கூடிய லீவு நாட்கள் உரித்தாக வேண்டும் என்பதையும்;
(iii) தாபனக் கோவையின் 18:4:1 உப பிரிவிற்கு அமைவாக தேவையாயின் மேலும் 84 நாட்கள் சம்பளமற்ற லீவினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும்;
(iv) மேற்படி (i) இன் கீழ் லீவு கணிப்பிடப்படும் போது லீவு நாட்களுக்குரிய சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, மற்றும் அரச லீவு நாட்கள் உள்ளடக்கப்பட கூடாது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) ஆயினும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பட்டதாரி பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பெண் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தின் படி இவர்களுக்கு ஆறு கிழமை பிரசவ லீவு மாத்திரம் கிடைக்கின்றது என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
(ii) இந்த உத்தியோகத்தர்களுக்கு தாபனக் கோவைக்கு ஏற்ப கிடைக்கவேண்டிய பிரசவ லீவினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பாரா என்பதையும்;
(iii) ஆமெனில், அத் தேதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-08-07
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-07
பதில் அளித்தார்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks