E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0496/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

    1. 496/ '19

      கௌரவ ஆனந்த அலுத்கமகே,— நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரளைப் பிரதேச செயலகப் பிரிவில் வாழ்கின்ற மக்கள் கடும் நீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) இப்பிரிவில் அமைந்துள்ள ராக்ஷாவ, அசு பினி எல்ல போன்ற நீரேந்து பிரதேசங்களினால் மா ஒய உருவாகியுள்ளதென்பதை அவர் அறிவாரா எனவும்;

      (iii) மேற்படி நீரேந்து பிரதேசங்களினூடாக ஓடிச் செல்கின்ற மா ஒயவை பயன்படுத்தி அரனாயக்க மற்றும் மாவனெல்ல தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (iv) நீர் இல்லாமையினால் அவதிப்படும் கங்க இஹல கோரளை மக்களுக்கு முதலாவதாக நீர் வழங்கி ஏனைய தொகுதிகளுக்கு நீர் வழங்குவது நியாயமானதல்ல என்பதையும்;

      (v) பிரச்சினை ஏற்படாதவாறு கங்க இஹல கோரளை மக்களுக்கு நீர் வழங்கி அரனாயக்க மற்றும் மாவனெல்ல மக்களுக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-18

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-18

பதில் அளித்தார்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks