பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0505/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

    1.  

      கெளரவ எஸ்.எம். மரிக்கார்,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மேல் மாகாண வைத்தியசாலைகளில் சிகிச்சைசார் கழிவுப் பொருட்கள் முல்லோியா, சிசிலி ஹனாரோ நிறுவனத்தில் 24 மணி நேரமும் எரிக்கப்படுவதனால் வெளியாகும் புகை காரணமாக அதனைச் சூழ வசிக்கின்ற மக்கள் 2004 ஆம் ஆண்டு முதல் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றார்கள் என்பதையும்;

      (ii) மேற்படி நிறுவனத்தை தாபிக்கும் போது உலக சுகாதார தாபனத்தின் தகவுதிறன்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை என்பதையும்;

      (iii) மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உரிமப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் போது பிரதேச சுகாதார மருத்துவ அலுவலரின் சிபாரிசு பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதையும்;

      (iv) கடுமையாக உரிமப்பத்திர நிபந்தனைகள் மீறப்படுகின்றன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) பிரதேச மக்களுக்கு சுகாதார தொல்லைகளை ஏற்படுத்துகின்ற சூழல் மாசடைவு இதன் மூலம் இடம்பெறுகின்றது என்பதை விஞ்ஞான ரீதியாக பரிசோதனை செய்து அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடொன்று காணப்படுகின்றதா என்பதையும்;

      (ii) மக்களுக்கு இடம்பெறுகின்ற அசௌகரியங்களைக் குறைப்பதற்காக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iii) இன்றேல், இந்த தொல்லைகளை தடுப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய குறுங்கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) உலக சுகாதார தாபனத்தின் தகவுதிறன்களுக்கு இசைவாக இலங்கையினுள் சிகிச்சைசார் கழிவுகளை எரிப்பதற்கான நிலையமொன்றை உருவாக்க முடியுமா என்பதையும்;

      (v) அதற்கு அரசாங்கம் ஏற்கெனவே திட்டங்களை வகுத்துள்ளதா என்பதையும்;

      (vi) ஆமெனில், அது அமுல்படுத்தப்படும் திகதி யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-06

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-06

பதில் அளித்தார்

கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks