பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0506/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

    1. 506/ '19

      கெளரவ எஸ். எம். மரிக்கார்,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் திரு. அஜித் நிவாட் கப்ராலின் தங்கையான திருமதி சிரோமணி விக்கிரமசிங்ஹ, லங்காபுத்ர வங்கியில் பிரதம நிறைவேற்று அலுவலராக பணியாற்றிய காலத்தில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ப்ரயிஸ் வோட்டர்ஹஷஸ் கூப்பர்ஸ் கணக்காய்வு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (ii) 2006 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை வங்கிச் சட்டத்தை மீறி அரசியல் ஆதரவாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (iii) மீளச் செலுத்துவதற்கான ஆற்றலைக் கவனத்திற்கொள்ளாது அரசக் காணிகள், விகாரைகளுக்குரிய காணிகள். தரிசுக் காணிகள் மற்றும் மாணிக்கக் கற்களாக காண்பிக்கப்பட்ட படிகக் கற்கள் ஆகியவற்றை உத்தரவாதமாகப் பெற்று கடன் வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) அவ்வாறு கடன் பெற்றுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      (ii) அவ்வாறான ஒவ்வொரு நபரும் நிறுவனமும் பெற்றுள்ள கடன் தொகை யாது என்பதையும்;

      (iii) இற்றைவரை மேற்படி கடன் தொகையில் மீளச் செலுத்தப்பட்டுள்ள தொகை யாது என்பதையும்;

      (iv) இவ்வாறு கடன் வழங்க அனுமதியளித்த அப்போதைய பிரதான நிறைவேற்றுனர் உட்பட பணிப்பாளர் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) ஆமெனின், அதன் முன்னேற்றம் யாது என்பதையும்;

      (vi) இன்றேல், அது தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-07

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks