E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0511/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

    1. 511/ '19

      கௌரவ விமலவீர திசாநாயக்க,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளோ அல்லது வசதிகளோ அதிகரிக்கின்ற போது அதற்கு ஏற்றவாறு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அவற்றில் பாதி ஏற்புடையதென்பதையும்;

      (ii) கடந்த காலத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      (iii) எனினும் காலம் நிறைவுபெற்றுள்ளமையினால் தற்போது கலைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர்களுக்கு மேற்படி அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளின் அல்லது வசதிகளின் ஒரு பகுதி நிலுவை கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதென்பதையும்;

      (iv) கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு தற்போது ஒரு வருடம் நெருங்கியுள்ள போதிலும், அம்மாகாண உறுப்பினர்களுக்குரிய நிலுவை கொடுப்பனவு இது வரை வழங்கப்படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இலங்கையின் ஏனைய மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கு உரித்தான மேற்படி கொடுப்பனவு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு கிடைக்காமை அநீதியென ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) கிழக்கு மாகாண சபையின் முன்னால் உறுப்பினர்களுக்குரிய நிலுவை கொடுப்பனவு வழங்கப்படும் திகதி யாதென்பதையம்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-09

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks