பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
527/ '19
கௌரவ சந்திம வீரக்கொடி,— நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அம்பலாங்கொடை திலக்கபுர, சிறிசுமனகமவில் வதியும் 180 குடும்பங்களுக்கு குழாய் நீர் வசதிகளை வழங்குவதற்காக 2017 ஆம் ஆண்டு திலக்கபுர சமுதாய அபிவிருத்திச் சங்கத்தினால் சமுதாய நீர்க் கருத்திட்டத்தின் கீழ் நீர்க் குழாய்கள் இடப்பட்டு நீர் தாங்கியும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) 2017 பெப்ரவரி மாதம் இக்கருத்திட்டத்திலிருந்து நீரைப் பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டு திலக்கபுர சமுதாய அபிவிருத்திச் சங்கத்தினால் பிரதேசவாழ் மக்களிடமிருந்து ரூபா 10,000/- சேகரித்துக்கொள்ளப்பட்டுள்ளதென்பதையும்;
(iii) மேற்படி பிரதேசவாழ் மக்களின் கிணற்று நீருடன் மலசலக் கழிவு நீர் கலந்துள்ளதனால் சுகாதார மற்றும் துப்பரவேற்பாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இதுவரை மேற்படி நீர் வழங்கல் பெற்றுக்கொடுக்கப்படாதமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(ii) இப்பிரதேசவாழ் மக்களுக்கு குழாய் நீர் வசதிகளை தாமதமின்றிப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-08-23
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.
அமைச்சு
நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-23
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks