E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0535/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

    1. 535/ '19

      கௌரவ பிமல் ரத்னாயக்க,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கொழும்பு வெளிச் சுற்றுவட்ட வீதியை நிர்மாணிக்கும்போது கடுவெல, ரக்கஹவத்த பிரதேசத்தில் களனி ஆற்றின் இடது மற்றும் வலது கரையோரங்களில் சுமார் 4 அடி மண் வெட்டி அகற்றப்பட்டு, கொங்கிரீட் தூண்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதையும்;

      (ii) ஒவ்வொரு வருடத்திலும் பெரும்பாலும் வெள்ளப்பெருக்கு அபாயத்திற்கு இலக்காகின்ற ரக்கஹவத்த, ஹேவாகம ஆகிய பிரதேசங்கள் இக்காரணத்தினால் பெரும் வெள்ளப்பெருக்கு அபாயத்துக்கு இலக்காகின்றன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) ஆற்றங்கரையோரம் வெட்டப்பட்டதன் காரணத்தினால் கடும் வெள்ளப்பெருக்கு ஆபத்துக்கு உள்ளாவதன் மூலம் பிரதேச மக்களுக்கு நேரிடுகின்ற சேதத்தைத் தடுக்கும் பொருட்டு வெட்டப்பட்ட கரையோரத்தை உரிய நிலைக்கு கொண்டுவருவாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-16

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-20

பதில் அளித்தார்

கௌரவ கபீர் ஹஷீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks