E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0552/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

    1. 552/ '19

      கௌரவ சி. சிறீதரன்,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1000 பாலங்களை நிர்மாணிப்பதற்கான திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (ii) அக்கருத்திட்டம் அப்பிரதேச மக்களின் நடவடிக்கைகளுக்குப் பயனற்றது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இப்பாலம் 1000 கருத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலங்கள் பற்றிய விபரங்கள் என்பதையும்;

      (ii) கருத்திட்டத்தின் ஒப்பந்ததாரர்கள் யாவர் என்பதையும்;

      (iii) இப்பாலம் தொடர்பாக வேறு திட்டமொன்று அப்பிரதேசங்களுக்குப் பொருத்தமானவாறு தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) இன்றேல், வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட மாதிரியொன்றின்படி, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) (i) இக்கருத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டப் பாலங்களின் எண்ணிக்கை என்ன என்பதையும்;

      (ii) வேலை முடிவுறுத்தப்பட்ட பாலங்களின் எண்ணிக்கை என்னவென்பதையும்;

      (iii) இதுவரை நிர்மாணிக்கப்பட்டுவரும் பாலங்களின் எண்ணிக்கை என்னவென்பதையும்;

      (iv) நிர்மாணிக்கப்படவுள்ள பாலங்களின் எண்ணிக்கை என்னவென்பதையும்:

      (v) இப்பாலங்களின் ஒப்பந்ததாரர்களின் விபரங்கள் என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-22

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-05-22

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks