E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0559/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

    1. 559/ '19

      கௌரவ சி. சிறீதரன்,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வட மாகாணத்தில் இயங்குகின்ற அரச வங்கிகள், தனியார் வங்கிகள், காப்புறுதிக் கம்பனிகள், நிதிக் கம்பனிகள் மற்றும் நுண்நிதிக் கம்பனிகள் மாவட்டரீதியாக எத்தனை;

      (ii) அவற்றின் பெயர்கள்;

      (iii) பொதுமக்களுக்குக் கடன் வழங்குகையில், தனியார் வங்கிகள், காப்புறுதிக் கம்பனிகள் மற்றும் நுண்நிதிக் கம்பனிகளால் தனித்தனியாக அறவிடப்படும் வட்டி வீதங்கள்;

      ஆகியவற்றை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயங்கும் நுண்நிதிக் கம்பனிகளின் நியாயமற்ற நடைமுறைகளால் இழைக்கப்பட்ட அநீதிகள் காரணமாக அதிகளவிலான உயரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அவர் அறிவாரா;

      (ii) எதிர்காலத்தில் அத்தகைய உயிரிழப்புக்கள் ஏற்படாது தடுக்குமுகமாக மேற்படி நுண்நிநிக் கம்பனிகளின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுமா;

      (iii) யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது பொருளாதார இயலுமைகளை இழந்துள்ள வட மற்றும் கிழக்கு மாகாண மக்களை இலக்கு வைத்து நுண்நிதிக் கம்பனிகள் அவர்களது செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கான நோக்கம் என்ன;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-10-23

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks