பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0603/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. 603/ '18

      கெளரவ வாசுதேச நாணாயக்கார,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மின்சார இணைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்காக குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு ரூபா 40,000/- ஐக் கடனாக வழங்கி அதற்கான தவணைக் கட்டணத்தை மாதாந்த மின் கட்டணப் பட்டியலுடன் இணைத்து செலுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த வசதி இன்றளவிலும் நடைமுறையில் உள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனின், அவ்வாறான சந்தர்ப்பங்களில் வீடொன்றுக்கான மின் சுற்றுக் கம்பிகளை இணைக்கையில் 05 மின் குமிழ்கள், 01 செருகி மற்றும் மின் வழங்கல் பெட்டி ஒன்றுக்காக சுமார் ரூபா 21,000 அறவிடப்படுகின்றதா என்பதையும்;

      (iii) அவ்வாறரயின், இக்கட்டணம் சந்தைக் கட்டணத்தை விட எவ்வளவு அதிகரிக்கின்றது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-11

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-07-11

பதில் அளித்தார்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks