E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0615/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

    1. 615/ '18

      கௌரவ ஆனந்த அலுத்கமகே,— நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த தினத்திலிருந்து இன்றுவரை கண்டி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திய குடிநீர் கருத்திட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அந்த குடிநீர்க் கருத்திட்டங்கள் காணப்படுகின்ற பிரதேசங்கள் மற்றும் பாவனையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (iii) 2017 ஆண்டில் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் குடிநீரைப் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுள் தற்போது நீருக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதனையும்;

      (iv) நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியின் கங்க இஹல பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கின்ற பெரும்பாலான மக்கள் குடிநீர் வசதியில்லாத காரணத்தினால் பாரிய பாதிப்பிற்கும் அசௌகரியங்களுக்கும் ஆளாகியுள்ளதனை ஏற்றுக்கொள்வாரா என்பதனையும்;

      (v) அந்த மக்களின் குடிநீர் பிரச்சினையை துரிதமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதனையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-03

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-03

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks