பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
750/ '19
கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— உள்ளக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1948 தொடக்கம் 1995 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் குடியிருந்து இந்நாட்டில் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ள அண்மைக்கால இந்திய வம்சாவளியைக் கொண்ட (Recent Indian Origin) நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டின் பிரகாரம் எத்தனை என்பதையும்;
(ii) 1948 தொடக்கம் 1995 ஆம் ஆண்டு வரை சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய பிரஜாவுரிமையைப் பெற்று அல்லது பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவை நோக்கிச் சென்ற இந்நாட்டில் குடியிருந்த அண்மைக்கால இந்திய வம்சாவளியைக் கொண்ட நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டின் பிரகாரம் எத்தனை என்பதையும்;
(iii) 1948 தொடக்கம் 1995 ஆம் ஆண்டு வரை இலங்கையில் குடியிருந்து இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iv) 1948 தொடக்கம் 1995 ஆம் ஆண்டு வரை இலங்கையில் குடியிருந்து இந்திய பிரஜா உரிமையைப் பெற்றுக்கொண்டு அல்லது பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுக்குச் சென்ற நபர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-08-08
கேட்டவர்
கௌரவ உதய கம்மன்பில, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-08
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks