பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0774/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 774/ '19

      கௌரவ இந்திக்க அநுருத்த ஹேரத்,— கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) நாட்டின் பல மாவட்டங்களில் பேணப்பட்டு வருகின்ற பல நெசவுத்தொழில் நிலையங்கள் தொழில்வாய்ப்புக்கள் பலவற்றை உருவாக்கி தேசிய உற்பத்திக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பு நல்குகின்றன என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) கம்பஹா மாவட்டத்தில் இயங்கி வருகின்ற பிரதான நெசவுத்தொழில் நிலையங்களின் எண்ணிக்கை, துணைக் கிளைகளின் எண்ணிக்கை மற்றும் மனைசார் நிலையங்களின் எண்ணிக்கை என்பன முறையாக எத்தனை என்பதையும்;

      (ii) கம்பஹா மாவட்டத்தில் தற்போது மூடப்பட்டுள்ள பிரதான நெசவுத்தொழில் நிலையங்களின் எண்ணிக்கை, துணை நிலையங்களில் எண்ணிக்கை மற்றும் மனைசார் நிலையங்களின் எண்ணிக்கை என்பன முறையாக எத்தனை என்பதையும்

      (iii) மேற்படி (ii) இல் குறிப்பிடப்பட்ட நிலையங்கள் மூடப்படுவதற்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் காரணிகள் மற்றும் அதன் மூலம் இழக்கப்பட்ட தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) மேற்படி உள்நாட்டுக் கைத்தொழிலின் மேம்பாட்டுக்காகவும், கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்காகவும் 2019 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்மொழிவுகள் யாவை என்பதையும்;

      (v) மேற்படி முன்மொழிவுகள் தொடர்பாக திருப்தியடைகின்றாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) திவுலப்பிட்டிய தொகுதியில் இயங்கி வருகின்ற நெசவுத் தொழில் நிலையங்களின் வருடாந்தப் புரள்வு எவ்வளவு என்பதையும்;

      (ii) மேற்படி நிலையங்களைப் பேணிச் செல்வதனை மேற்பார்வை செய்வதற்கான அதிகாரத்தினைக் கொண்டுள்ள நிறுவனம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-25

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-07-25

பதில் அளித்தார்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks