E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0775/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 775/ '19

      கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நாட்டில் அரசாங்க நிர்மாணிப்புகளை மேற்கொள்வதற்காக அடையாளம் காணப்பட்ட தொழில்வாண்மைத் தகைமைகளைக்கொண்ட பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு;

      (ii) ஒவ்வொரு துறையிலும் நிர்மாணிப்புகளை மேற்கொள்ள மேற்படி ஒப்பந்தக்காரர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படை தொழில்வாண்மைத் தகைமைகள் யாவை;

      (iii) அரசாங்க நிர்மாணிப்புகளுக்காக 2018 ஆம் ஆண்டில் அரசாங்க நிர்மாணிப்பு ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்தியுள்ள மொத்த பணத்தொகை எவ்வளவு;

      (iv) அரசாங்க நிர்மாணிப்புகளுக்காக 2018 ஆம் ஆண்டுக்காக அரசாங்க நிர்மாணிப்பு ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்த எஞ்சியுள்ள மொத்த பணத்தொகை எவ்வளவு;

      (v) சம்பந்தப்பட்ட கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுவது தாமதித்ததன் மூலமாக அத் துறைகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தக்காரர்கள் கடுமையான நிதி வசதியீனத்திற்கு இலக்காகின்றனரென்பதையும்; அதன்காரணமாக அவர்களின் தொழில்முயற்சி நடவடிக்கைகள் சீரழிதல் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றதென்பதையும் ஏற்றுக்கொள்கிறாரா;

      (vi) சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு மேற்படி நிலுவைத் தொகைகள் செலுத்தப்படும் திகதி யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-08

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-08

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks