E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0816/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

    1. 816/ '19

      கௌரவ ரீ ரஞ்சித் டீ சொய்சா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 1984 ஆம் ஆண்டிலிருந்து 2016/2017 பெரும் போகம் வரை அம்பாறை மாவட்டத்துக்குரிய லாஹுகல பிரதேச செயலகப் பிரிவின், பாணம தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள பயிரிடப்பட்ட காணிகளில் பயிரிடும் நடவடிக்கைகளை லாஹுகல வனப் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தியுள்ளார்கள் என்பதை அறிவாரா?

      (ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iii) இவ்விடயம் தொடர்பில் உத்தரவு பிறப்பித்த உத்தியோகத்தர் யார் என்பதையும்;

      (iv) அக் காணிகளில் மீளப் பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-09

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-07-09

பதில் அளித்தார்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks