E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0860/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. 860/ '19

      கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2018 மே மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6133 குடும்பங்களைச் சேர்ந்த 24,625 நபர்களுக்கு ஏற்பட்ட முழு அளவிலான மற்றும் பகுதியளவிலான சேதங்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், அது தொடர்பான தகவல்களைக் குறிப்பிடுவாரா என்பதையும்;

      (iii) 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்தத்தின்போது அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களில், அனர்த்தக் காலத்தினுள் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்த கூற்றுக்கமைய அமைக்கப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iv) 2018 ஆம் ஆண்டு மே மாதம் இரத்தினபுரி மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளின்போது அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் அடங்கலான பிரதிநிதிகள் இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவுடன் நடத்திய கலந்துரையாடலின்போது, அடிக்கடி அனர்த்தங்களுக்கு உள்ளாகும் ஒன்பது பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிறுத்தி வைக்க வேண்டிய படகுகளின் எண்ணிக்கை 102 எனக் குறிப்பிட்டுள்ளனரா என்பதையும்;

      (v) ஆமெனில், மேற்படி படகுகளை வழங்கி அவற்றை உரிய இடங்களில் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-24

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-05-24

பதில் அளித்தார்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks