E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0877/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

    1. 877/ '19

      கௌரவ விமலவீர திசாநாயக்க,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2018/2019 பெரும் போகத்தின்போது இலங்கையில் சோளம் பயிரிடப்பட்ட காணியின் அளவு யாதென்தையும்;

      (ii) அவற்றில் படைப்புழு தொற்றிற்கு உள்ளாகி அழிவடைந்த சோளப்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்ட காணியின் அளவு யாதென்பதையும்;

      (iii) அப்பயிர்ச் செய்கை அழிவினால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட அண்ணளவான நட்டம் எவ்வளவு என்பதையும்;

      (iv) படைப்புழு தொற்றுக்கு உள்ளாகி சோளப்பயிர்ச் செய்கை அழிவடைந்தமையால் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுமா என்பதையும்;

      (v) ஆமெனில், அந்நிவாரணங்கள் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-06

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-06

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks