பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
903/ '19
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010.12.10 ஆம் திகதிய 01/2010 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் மூலமாக நியதிச்சட்ட அலுவலர்களுக்கு சலுகை அடிப்படையில் வாகனம் இறக்குமதி செய்கையில் இரண்டாம் வாகனத்தைப் பெறுவதற்காக வழங்கப்பட்டிருந்த 5 வருட காலப்பகுதி 2016.07.14 ஆம் திகதிய 1/2016 ஆம் இலக்க சுற்றுநிருபம் 2015.11.21 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு 10 வருடங்கள் வரை நீடிக்கப்பட்டதனால் இதற்காக 2016 ஆம் ஆண்டினுள் தகைமை பெற்ற உத்தியோகத்தர்களுக்கு பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது என்பதையும்;
(ii) 2018.06.08 ஆம் திகதிய 01/2018(1) ஆம் இலக்க சுற்றுநிருபம் 2018.06.09 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அக்காலப்பகுதி 5 ஆண்டுகள் வரை குறைக்கப்பட்டதால் 2016 ஆம் ஆண்டு முதல் 2018.06.08 ஆம் திகதி வரை ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு அவ்வுரிமை கிடைக்காமல் போனது என்பதையும்;
(iii) மேற்குறிப்பிட்ட 01/2018(1) சுற்று நிருபத்திற்கு அமைவாக அமைச்சரவை தீர்மானத்தில் 2018.06.08 அல்லது 2018.06.09 எனத் திகதிகள் குறிப்பிடப்படாததால் ஏனைய நிறுவனங்களில் அதற்கு சமமான மட்டத்தில் ஓய்வு பெற்றிருந்த அலுவலர்களுக்கு உரித்தாகியிருந்த ரூபா 3.6 மில்லியன் பெறுமதியான அனுமதிப்பத்திரம் 01/2018(1) சுற்றுநிருபத்தின் மூலம் இவ்வலுவலர்களுக்கு அற்றுப்போகச் செய்யப்பட்டுள்ளது என்பதையும்;
(iv) அதற்கமைவாக, 2016 ஆம் ஆண்டு முதல் 2018.06.08 வரையில் ஓய்வு பெற்ற, 2015 சுற்றுநிருபத்திற்கு அமைவாக தகைமைகளை பூர்த்தி செய்திருந்த அனைத்து அலுவலர்களுக்கும் இவ்வனுமதிப்பத்திரம் வழங்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா;
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-09-03
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks