பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
964/ '19
கௌரவ பிமல் ரத்நாயக்க,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருநாகல் மாவட்டத்தின் மஹவ பிரதேச செயலகப் பிரிவிற்குச் சொந்தமான இலக்கம் 205, கஜநெக்கம பிரிவில் அமைந்துள்ள ஹாமுகே வத்த எனும் பெயரில் அழைக்கப்படுகின்ற 23 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணி அரசியல்வாதி ஒருவரினால் 2017 ஆகஸ்ட் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நில அளவை செய்யப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) நில அளவை பணிகளை மேற்கொண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட பின்னர் அரச ஊழியர்களுக்கு வீடுகளை கட்டுவதற்கு விநியோகிக்கும் போர்வையில் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டதென்பதையும்;
(iii) அப்பிரதேசத்தின் மக்கள் அச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அக்காணியை பிரித்து ஒதுக்கியமை சட்ட விரோதமானதென சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களினால் உறுதிப்படுத்தப்பட்டதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி அ (i) இல் குறிப்பிடப்பட்ட காணி, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சிற்கு சொந்தமான காணியா என்பதையும்;
(ii) இது பிறிதொரு அமைச்சிற்கு சாட்டப்பட்ட காணியாயின் அந்த அமைச்சு யாதென்பதையும்;
(iii) இவ்வாறு அரசிற்கு சொந்தமான காணியொன்றை சட்ட விரோதமாக பிரித்து ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட ஆட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) இல்லையெனில், எதிர்காலத்தில் அதற்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(v) ஏதேனுமொரு கருத்திட்டத்திற்காக இக்காணியை பயன்படுத்துவதற்கு திட்டமொன்று உள்ளதா என்பதையும்;
(vi) ஆமெனில், அது எதற்காக என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-25
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-25
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks