E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1034/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கனக ஹேரத், பா.உ.

    1. 1034/ '19

      கௌரவ கனக ஹேரத்,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு ,—

      (அ) (i) யட்டியாந்தோ​ட்டை பிரதேச செயலகப் பிரிவிற்கு உரித்தான சீபோத் பிரிவில் அமைந்துள்ள சென்ட் கெத்தரின் தோட்டம் களனி கங்கையின் நீரேந்துப் பகுதி என்பதுடன் அது மரைகள், மான்கள் ஆகிய விலங்குகளின் வாழ்விடம் என்பதனையும்;

      (ii) அது உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள பிரதேசம் என்பதனையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இந்த தோட்டத்தில் 50 ஏக்கர் காணியொன்றினை பிரித்து தனியார் ஒருவருக்கோ அல்லது குழுவொன்றிற்கோ வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும்;

      (ii) அதற்கென காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினூடாக நிலஅளவைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும்;

      (iii) அந்த நிலஅளவை நடவடிக்கைகள் அரசாங்க விடுமுறை நாட்களில் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதற்கான காரணம் யாதென்பதையும்;

      (iv) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் அப்பிரதேசம் தொடர்பில் தனியார் துறையினரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் சுற்றாடல் முக்கியத்துவம் காரணமாக மக்களது எதிர்ப்பின் காரணமாக நிராகரிக்கப்பட்டாலும், இந்த நிலைமையின் கீழ் அந்த பிரச்சினைகள் மீண்டும் ஏற்பட மாட்டாதா என்பதனையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-05

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks