பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1052/ '19
கௌரவ சனத் நிசாந்த பெரேரா,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கை நிருவாகச் சேவைக்குரிய உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது;
(ii) திணைக்களத்தின் பதவிகளில் தற்போது வெற்றிடம் நிலவுமாயின் மேற்படி வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது;
(iii) குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவி இலங்கை நிருவாகச் சேவையின் எத்தரத்திற்குரிய பதவியாகும் ;
(iv) மேற்படி பதவி இன்றளவில் வெற்றிடமாகி இருப்பின் வெற்றிடமாகிய திகதி யாது;
(v) நாட்டில் நிலவுகின்ற நிகழ்கால பாதுகாப்பு நிலைமைக்கிணங்க இப்பதவியை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் நாட்டின் பாதுகாப்பு நிலைமைமீது இது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
(vi) ஆமெனில் மேற்படி வெற்றிடம் நிரப்பப்படும் திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-09-17
கேட்டவர்
கௌரவ சனத் நிசாந்த, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks