பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0845/ ’10
கெளரவ விக்டர் அந்தனீ,— நீர்ப்பாசன, நீ்ர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(1) (அ) (i) மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 10 ஆறுகளை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்யும் முன்மொழிவுக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்ட தெதுரு ஓயாத் திட்டம் மிகவும் வெற்றிகரமான ஒரு திட்டமென்பதையும், (ii) தெதுரு ஓயாத் திட்டத்தின் கீழ் செயற்படும் செங்கல் ஒயத்திட்டத்தின் வேலைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதென்பதையும் அவர் அறிவாரா? (ஆ) (i) தெதுரு ஓயாத் திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் போஷிக்கப்படுகின்ற வாவிகளின் எண்ணிக்கை யாதென்பதையும், (ii) இவ்வாவிகளின் பெயர்கள் யாவையென்பதையும், (iii) இவ்வாவிகளுக்கருகில் நீர்ப்பாசனத் திட்டங்கள் அமைக்கப்படுமா என்பதையும். (iv) இந் நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக புத்தளம் மாவட்டத்தில் போஷிக்கப்படும் பரப்பளவு யாதென்பதையும், (v) இத்திட்டத்தை நிறைவு செய்யத் தேவைப்படும் காலம் யாதென்பதையும், (vi) இத்திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-01-21
கேட்டவர்
கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks