பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0846/ ’10
கெளரவ விக்டர் அந்தனீ,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(1) (அ) (i) கமநெகும கருத்திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் சிறு வாவிகளை அபிவிருத்தி செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும், (ii) அபிவிருத்தி செய்யப்படும் வாவிகளின் பெயர்கள் யாவையென்பதையும் என்பதை அவர் அறிவிப்பாரா? (ஆ) (i) இக்கருத்திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் சிறு வாவிகளை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதேச செயலாளர், கம நல சேவை உத்தியோகத்தர், கமநல சேவை உதவிப் பணிப்பாளர் மற்றும் கமநல சேவைத் திணைக்களத்தின் கமநல சேவை ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதென்பதையும், (ii) அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான நீண்ட செயற்பாடு காரணமாக வாவிகளை மறுசீரமைக்கும் விவசாய அமைப்புக்களுக்கு மழை காலத்துக்கு முன்பு உரிய விதத்தில் தமது நடவடிக்கைகளை நிறைவு செய்துகொள்ள முடியாமல் பெரும் அசெளகரியங்களை எதிர்காள்ள நேரிடுகின்றதென்பதையும் அவர் ஏற்றுக்கொள்வாரா? (இ) (i) சிறிய குளங்களுக்கான அபிவிருத்திக் கருத்திட்டங்களை, கமநல சேவைகள் அதிகாரி மற்றும் பிரதேச செயலாளர் மூலம் மாத்திரம் பரிந்துரை பெற்று, விவசாய அமைப்புக்களுக்கு பெற்றுக்கொடுக்கவும், (ii) அதன் மூலம் இரண்டு வார சிறு கால எல்லைக்குள் இச்சிறு குளங்கள் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த முடியுமான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவும் அவர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-01-21
கேட்டவர்
கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks