E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0009/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 9/2020

      கௌரவ ஹேஷா விதானகே,— கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு உரித்தான —

                 (i)     கைத்தொழில் பேட்டைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

                 (ii)    நில அலகுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

                 (iii)   கைத்தொழில் பேட்டைகளில் இயங்கும் கைத்தொழிற்சாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) கைத்தொழில் பேட்டைகளில் தொழில் புரியும் ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் வெவ்வேறாக இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) 2017 ஆம் ஆண்டில் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் மத்திய மாகாணத்துக்காக —

      (i) சுயதொழில் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்ட இடங்கள் யாவையென்பதையும்;

      (iii) வழங்கப்பட்டுள்ள கருவிகள் யாவையென்பதையும்;

      (iv) பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ள அடிப்படை யாதென்பதையும்;

      (v) மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில்நுட்ப பயிற்சி வேலைத்திட்டங்கள் யாவையென்பதையும்;

      அவர் வெவ்வேறாக இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) தற்போது இணையத்தின் ஊடாக இலத்திரனியல் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிராமிய பிரதேசங்களில் வாழ்வோருக்குக்கும் திறந்துவிடப்பட்டுள்ள போதிலும், அதற்கான போதிய அறிவு வழங்கப்படவில்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) இவ்வறிவினை முறையாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2020-10-06

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

அமைச்சு

கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-01-19

பதில் அளித்தார்

கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks