பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
264/2020
கௌரவ புத்திக பத்திறண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2008 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க, வாழ்க்கைத்தொழில் சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழக சட்டத்திற்கமைவாக பல்கலைக்கழகக் கல்லூரிகள் பட்டம் வழங்கும் நிறுவனங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும்;
(ii) தற்போது இந்நிறுவனங்களினால் பட்டத்திற்குப் பதிலாக உயர் டிப்ளோமா மட்டும் வழங்கப்படும் மூன்று வருடகால கற்கைநெறிகள் நடாத்தப்படுகின்றன என்பதையும்;
(iii) பட்டப் படிப்பு கற்கைநெறிகளை நடாத்துவதற்குத் தேவையான விரிவுரை மண்டபங்கள், நூலகங்கள், விரிவுரையாளர்கள் உட்பட ஏனைய வசதிகள் இந்நிறுவனங்களில் இல்லையென்பதையும்;
(iv) இதன் காரணமாக கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்துள்ள மற்றும் தற்போது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக அமைந்துள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி பிரச்சினைகளை துரிதமாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அது தொடர்பில் செலவிட எதிர்பார்க்கும் பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படும் காலப்பகுதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-08
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2021-01-08
பதில் அளித்தார்
கௌரவ சீதா அரம்பேபொல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks