பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) 2020 ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அம்முறைப்பாடுகளில் விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்ட முறைப்பாடுகளில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) முறைப்பாடு கிடைக்கப்பெற்று, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு அல்லது முறைப்பாட்டைத் தள்ளுபடி செய்வதற்கு சாதாரணமாக எடுக்கும் காலம் யாதென்பதையும்;
(v) விசாரணை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக அதிகாரசபையினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இம்முறைப்பாடுகளுடன் தொடர்புடைய பாதிக்கப்பட்ட சிறுவர்களில் —
(i) தமது குடும்பங்களுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) தமது குடும்பங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) அவ்வாறு விலக்கி வைக்கப்படுபவர்கள் தடுத்து வைக்கப்படுகின்ற இடங்கள் யாவையென்பதையும்;
(iv) தமது கல்வி நடவடிக்கைகளில் (முறைசார் மற்றும்/அல்லது முறைசாரா) முன்னர் போன்றே தொடர்ந்து ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை சதவீத அடிப்படையில் யாதென்பதையும்;
(v) முறையாகப் பயிற்சிபெற்ற ஆட்களினால் உளவியல் மற்றும் சமூக ரீதியிலான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இம்முறைப்பாடுகளுடன் தொடர்புடைய பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும் அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-06
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-10-06
பதில் அளித்தார்
கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks