E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0430/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாந்த பண்டார, பா.உ.

    1. 430/2020

      கௌரவ சாந்த பண்டார,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) இலங்கையின் வடமேல் மாகாணத்தில் தெதுருஓயா கருத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) மேற்படி கருத்திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ள /செலவிடப்படும் தொகை எவ்வளவு என்பதையும்;

      (ii) கருத்திட்டத்திற்காக நிதி பெற்றுக்கொள்ளப்பட்ட மூலங்கள் யாவை என்பதையும்;

      (iii) கருத்திட்டத்திற்காக காணிகளை நன்கொடையளித்த குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (iv) மேற்படி குடும்பங்களுக்கு போதிய நட்டஈடு செலுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;

      (v) மேற்படி குடும்பங்களுக்கு நட்டஈடு செலுத்துவதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை எவவளவு என்பதையும்;

      (vi) இதுவரை நட்டஈடு செலுத்தப்படாதுள்ள குடும்பங்களுக்கு நட்டஈடு செலுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-05

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-12-05

பதில் அளித்தார்

கௌரவ அநுராத ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks