பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
521/2020
கௌரவ முஜிபுர் ரஹுமான்,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவியின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டனவா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) குறிப்பிட்ட நேர்முகப் பரீட்சைக்காக உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டனரா என்பதையும்;
(ii) மேற்படி நேர்முகப் பரீட்சையின் போது புள்ளிகள் வழங்கப்படும் முறை யாது என்பதையும்;
(iii) நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் புள்ளி வழங்கும் முறையானது திருத்தப்பட்டதா என்பதையும்;
(iv) அவ்வாறு உரிய முறையில் திருத்தப்படுவது பொருத்தமானதா என்பதையும்;
(v) மேற்படி முறை திருத்தப்பட்டமை தொடர்பாக விண்ணப்பதாரிகள் விழிப்பூட்டப்பட்டனரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்படி நேர்முகப் பரீட்சை நடத்தப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேளையில் விண்ணப்பித்திருந்த உத்தியோகத்தர்களின் மூப்புரிமைப் பதிவேடு முற்தேதியிடப்பட்டதா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்த உத்தியோகத்தர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) அவ்வாறு முற்தேதியிடப்பட்டதன் அடிப்படை யாது என்பதையும்;
(iv) அதன் பின்னர், எதுவித அறிவித்தலோ விளக்கமளித்தலோ இன்றி நேர்முகப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதா என்பதையும்;
(v) நேர்முகப் பரீட்சையின் தற்போதைய நிலைமை யாது என்பதையும்;
(vi) நேர்முகப் பரீட்சை எதிர்காலத்தில் நடத்தப்படுமா என்பதையும்;
(vii) ஆமெனின், அத்திகதி யாது என்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) (i) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவியில் பதிற் கடமை புரிவதற்காக பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவியைச் சோ்ந்த உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா என்பதையும்;
(ii) ஆமெனில் அக்கடமைகள் யாவை என்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-06
கேட்டவர்
கௌரவ முஜிபுர் ரஹுமான், பா.உ.
அமைச்சு
பொதுமக்கள் பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-12-05
பதில் அளித்தார்
கௌரவ சரத் வீரசேக்கர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks